தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.
இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 2005ம் ஆண்டு சந்த் சா ரோஷன் என்ற பாலிவுட் படம் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார்.
பின் அப்படியே தெலுங்கில் ஸ்ரீ படத்தின் மூலம் அறிமுகமாக தமிழில் 2006ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.
அயன், பையா,சுறா, ஸ்கெச்ட், வீரம் என முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து கலக்கிய தமன்னா சில மாதங்களுக்கு முன்பு காவாலா பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இப்போது அசோ அசோ அச்சச்சோ என்ற பாடல் மூலம் மக்களை ஆட்டம் போட வைத்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், படமும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு பின் தமன்னா தனது சம்பளத்தை 30% உயர்த்தி அரண்மனை படத்திற்காக தமன்னா ரூ.4-5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக தமன்னா ரூ. 3 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.