Tamil News Channel

அரையிறுதியுடன் பிரான்ஸ் வெளியேறியது…!!

2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

Allianz Arena மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் எட்டாவது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியினர் கோல் அடித்து ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

மேலும் போட்டியின் 18வது நிமிடத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பு பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர், எம்பாப்பேவிற்கு கிடைத்திருந்தது. எனினும், அந்த வாய்ப்பு நழுவிச் சென்றது.

இந்நிலையில், 21வது நிமிடத்திற்கு பிறகு போட்டியின் போக்கு முற்றிலும் ஸ்பெயின் வசம் சென்றது.

இம்முறை யூரோ கிண்ணத்தில் எண்ணற்ற சாதனைகளை தன் பெயரில் சேர்த்த ஸ்பெயின் அணியின் பையன் யமல், 21வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோலை அடித்தார்.

இதன்மூலம் பையன் யமல் யூரோ கிண்ணத்தில் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

தொடர்ந்து 25வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டானி ஓல்மோ மற்றுமொரு கோலை அடிக்க போட்டியின் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்பெற்றது.

இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *