துபாயில் நடைபெற்றுவரும் 19 வயதிற்குற்பட்ட ஒருநாள் ஆசிய கிண்ண போட்டியின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்ததன் காரணமாக அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
இதற்கமைய நாளைய தினம் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியின் முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளும் மற்றைய போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பாகிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன.
ஏற்கனவே ஐக்கிய அரபு இராச்சிய அணியிடம் இலங்கை அணி தோல்வியை சந்தித்தமையினால் இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு குறைவடைந்திருந்தது.
இதேவேளை நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுகளால் தோல்வியடைந்ததும் மற்றைய போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணி 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜப்பான் அணியை வீழ்த்தியிருந்ததும் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியதற்கு காரணமாயிருந்தது.
இத்தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.