தான் ஜனாதிபதியானால், மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் தற்போது தேடப்பட்டு வரும் சிவப்பு பிடியாணையுடன் கூடிய அர்ஜுன்மகேந்திரனை மீண்டும் அழைத்து வருவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.