2019ம் ஆண்டு முதல் இந்த வருடம் (2024) ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 263.2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
கடற்றொழில் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த அலங்கார மீன்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், அது தொடர்பிலான தொழில்துறையை மேம்படுத்தவும் பல புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பில் மாணவர்கள் மத்தியில் அலங்கார மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக பாடசாலைகளில் அலங்கார மீன் வளர்ப்பு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .
மேலும் அபாயகர மீன்கள் இறக்குமதி செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட ரீதியாக அலங்கார மீன் வளர்ப்பு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.