January 13, 2026
 அளுத்கமவில் 13 சிறுவர்களை ஏற்றிச்சென்ற  முச்சக்கர வண்டி ஒன்று விபத்து !
புதிய செய்திகள்

 அளுத்கமவில் 13 சிறுவர்களை ஏற்றிச்சென்ற  முச்சக்கர வண்டி ஒன்று விபத்து !

May 9, 2025

அளுத்கம – பின்ஹேன குருகந்த பகுதியில் 13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது.

குறித்த பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்துக்கு சொந்தமான முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களை அதிக வேகமாக பாடசாலைக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 சிறுவர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் பலத்த காயமடைந்த 6 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *