அழகுசாதன நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்கள் மற்றும் சவக்காரங்களுக்கு SLS சான்றிதழை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவரா தெரிவித்துள்ளார்.
இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சவர்க்காரங்களின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும்.
ஆனால் நாட்டில் உள்ள பிரதான சவர்க்கார உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளின் சவர்க்காரம் நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இந்த நிறுவனமும் ஏனைய நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட TFM பெறுமதியுடன் சவக்காரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறதா? என்பதை பரிசோதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏற்பாடு செய்துள்ளது.