January 23, 2026
அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களுக்கு தடை!
World News புதிய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களுக்கு தடை!

Nov 24, 2025

அவுஸ்திரேலியாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு வயது சரிபார்ப்பை கட்டாயமாக்கி இருப்பதாக ஸ்னாப்சாட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிசம்பர் 10 முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை அமுலுக்கு வரும் நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்கள் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் அதிகபட்சம் 49.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படும். இது உலகின் மிகக் கடுமையான டிஜிட்டல் பாதுகாப்பு சட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஸ்னாப்சாட் மட்டுமல்லாமல், யூடியூப், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டோக், ரெடிட், ட்விட்ச், கிக் போன்ற தளங்களுக்கும் இந்தத் தடை பிரயோகமாகும்.

ஸ்னாப்சாட் பயனர்கள் தங்கள் வயதை ConnectID பயன்பாடு மூலம் வங்கிக் கணக்குடன் இணைத்து உறுதிப்படுத்தலாம். அதேபோல் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட k-ID மென்பொருளை பயன்படுத்தியும் வயது சரிபார்ப்பு செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

“புதிய தனியுரிமை அபாயங்களை உருவாக்காமல், இளைஞர்களை ஆன்லைனில் பாதுகாப்பது முக்கிய குறிக்கோள்” என ConnectID நிர்வாகப் பணிப்பாளர் எண்ட்ரூ பிளாக் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *