அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தனஞ்சய டி சில்வா தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிசங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, சொனல் தினுஷ, பிரபாத் ஜெயசூர்ய, ஜெப்ரி வான்டர்சே, நிசான் பீரிஸ், மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் பெப்ரவரி 29ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.