November 18, 2025
அஸ்ட்ராஜெனெகா  பற்றி  வைத்தியர் வெளியிட்ட தகவல்..!
Updates உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

அஸ்ட்ராஜெனெகா  பற்றி  வைத்தியர் வெளியிட்ட தகவல்..!

May 15, 2024

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியதால், இரத்த உறைவு,  பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் அடைப்பு  உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம் அதை  ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் பாதகமான விளைவு ஏற்படாது என்றும், இலங்கையர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *