அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பான முறைப்பாடு மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலனை செய்யப்பட்டதை தொடர்ந்து 3 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான ஆறு மாதகால இடைக்கால கொடுப்பனவு வெகுவிரைவில் வழங்கப்படுமென நிதியமைச்சர் செஹான் சேமசிங்க நலன்புரி சேவைகள் சபையின் அதிகாரிகளுடன் நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கயில் நலன்புரி கொடுப்பனவுகள் பெறும் பயனாளர்களின் எண்ணிக்கை 17 இலட்சமாக உயர்வடைந்துள்ளதுடன் பயனாளர்களுக்கான அடுத்த தவணை கொடுப்பனவை வழங்குவதற்கு முன்னர் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்டோபர்,நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களுக்கான இடைக்கால கொடுப்பனவு வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும்.என குறிப்பிடுள்ளார்.
எனவே மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகளினால் இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொண்ட5,209 குடும்பங்கள் நலன்புரி கொடுப்பனவை தொடர்ந்து பெறுவதற்கு தகுதியற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன்,2567 குடும்பங்கள் நலன்புரி கொடுப்பனவு பயனாளர் பட்டியலில் இருந்து தரமிறக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 11 இலட்ச முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகள் வெகுவிரைவில் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளதென பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.