சம்பள முரண்பாடுகளை முன்னிறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்து கொழும்பு லோட்டஸ் வீதியை நோக்கிச் சென்றதுடன், பொலிஸார் போராட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று (26.06) நாடளாவிய ரீதியில் சுகயீனமுற்றுள்ளதாக அறிவித்து 10,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தி தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 2