இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. அலுவலக வேலையில் இருந்து அன்றாடப் பணிகள் வரை அனைத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. பல சமயங்களில் ஆன்ட்ராய்டு போனின் சத்தம் குறைவதைக் காணலாம்.
இதனால், முக்கியமான நேரங்களில் இந்த பிரச்சனை நம்மை தடுமாற வைத்துவிடும். ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒலி குறைவாக இருந்தால், இனி கவலைப்பட வேண்டாம். ஏனெனில், இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு வழி இருக்கிறது. இதற்கு பயனர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம், வீட்டிலேயே உங்கள் ஆன்ட்ராய்ட் போனின் ஒலியை எளிதாக இரட்டிப்பாக்க முடியும்.
பயனர்கள் முதலில் தங்கள் போனின் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குச் செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து Sound & Vibration விருப்பத்திற்குச் செல்லவும். இதற்குள், பயனர்கள் Sound quality ஆப்ஷன்களை பெறுவார்கள். இதில் பயனர்கள் Dolby Atoms ஆப்ஷனை பெறுவார்கள். அதை நாம் ஆட்டோ மோடில் அமைக்க வேண்டும்.
பின்னர் பயனர்கள் கீழே உள்ள Adapt Sound ஆப்ஷனை பார்க்கவும். அதனை ஆஃப் செய்ய வேண்டும். பின்னர் பயனர்கள் அந்த விருப்பத்தை ”over 60 years old” என்று அமைக்க வேண்டும். இதன் விளைவாக, பயனர்கள் தங்கள் இயர்போன்களில் அதிக பாஸ் ஒலியைப் பெறுவார்கள்.
ஆனால் இந்த மாற்றங்களுக்கு பிறகும் கூடுதலாக, ஒலி அளவில் சிக்கல் இருந்தால், தொலைபேசியின் ஸ்பீக்கரில் உள்ள அழுக்குகளையும் பிரஷ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். யாராவது தங்கள் தொலைபேசியில் ஒலி பிரச்சனைகளை எதிர்கொண்டால், மேலே குறிப்பிட்ட முறையை பின்பற்றுவதன் மூலம் அதை சரிசெய்யலாம். இந்த முறை ஒவ்வொரு ஃபோனுக்கும் வேறுபடும் என்பதும் கவனிக்கத்தக்கது.