இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு SSC மைதானத்தில் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு வழங்கியது.
இதற்கமைய தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் சகல விக்கட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மட் சாஹ் (Rahmat Shah) 91 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
இலங்கைக்கு விஸ்வ பெர்னாண்டோ (Vishwa Fernando) 4 விக்கட்டுக்களையும், அசித பெர்னாண்டோ (Asitha Fernando) மற்றும் பிர்பாத் ஜயசூரிய (Prabath Jayasuriya) தலா 3 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 439 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மெத்தியூஸ் (Anjelo Mathews) 141 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் (Dinesh Chandimal) 107 ஓட்டங்களையும் அதிகபட்சமாக இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் நவீத் சந்ரான் (Naveed Zadran) 4 விக்கட்டுக்களை ஆப்கானிஸ்தான் அணி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 296 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இப்ராஹிம் சந்ரான் (Ibrahim Zadran) 114 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
இலங்கை அணிக்கு பிர்பாத் ஜெயசூரிய (Prabath Jayasuriya) 5 விக்கட்டுக்களையும், அசித பெர்னாண்டோ (Asitha Fernando) 3 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி விக்கட்டிழப்பின்றி வெற்றியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்னே (Dimuth Karunaratne) 32 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை வீரர் பிர்பாத் ஜெயசூரிய (Prabath Jayasuriya) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி இத்தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.