July 8, 2025
ஆப்கானிஸ்தான் அணி வெற்றி
News News Line Sports Top புதிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

Dec 30, 2023

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்றைய தினம் ஆரம்பமான T20 தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

சார்ஜா கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ரஹ்மானுல்லாஹ் குர்பாஷ் (Rahmanullah Gurbaz) 100 ஓட்டங்களையும், இப்ராஹீம் ஷந்ரான் (Ibrahim Zadran) 59 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் ஆயன் அப்ஷல் கான் (Aayan Afzal Khan), முஹம்மெட் ஜவாந் உல்லாஹ் (Muhammed Jawad Ullah) மற்றும் ஜுனைந் சிந்நீக் (Junaid Siddique) ஆகியோர் தலா 1 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

204 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் விரீத்யா அரவிந்த் (Vriitya Aravind) ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை அதிக பட்சமாக தனது அணிக்காக பெற்றிருந்தார்.

ஆப்கானிஸ்தான் சார்பாக பந்துவீச்சில் ஃபஷல்ஹக் ஃபரூகி (Fazalhaq Farooqi) 2 விக்கட்டுக்களையும், நவீன் உல் ஹக் (Naveen-Ul-Haq) மற்றும் கைஸ் அஹ்மட் (Qais Ahmad) ஆகியோர் தலா 1 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லாஹ் குர்பாஷ் (Rahmanullah Gurbaz) தெரிவு செய்யப்பட்டார்.

தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடரின் அடுத்த போட்டி நாளை மாலை 7:30 மணியளவில் சார்ஜா கிரிக்கட் மைதாணத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *