பொலன்னறுவை பிரதேசத்தில் திம்புலாகல கல்வி வலயத்துக்குட்பட்ட வெலிகந்த, அசேலபுர பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவியொருவர் கொண்டு சென்ற ஆமணக்கு விதைகளை உட்கொண்டு சுகவீனமுற்ற 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சுகவீனமடைந்த மாணவர்கள் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post Views: 2