2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரில் இன்றைய தினம் காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
அதற்கமைய இன்றைய தினம் 2 காலிறுதிப்போட்டிகளும் நாளைய தினம் 2 காலிறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இன்றைய நாளின் முதலாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய அணிகள் மோதுகின்றனர்.
இப் போட்டி மாலை 05 மணியளவில் அஹமட் பின் அலி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இப் போட்டி இன்று இரவு 09.00 மணியளவில் அல் ஜனூப் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நாளைய தினம் ஏனைய 2 காலிறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
அதில் முதலாவது போட்டியில் ஈரான் மற்றும் ஜப்பான் அணிகளும் மற்றைய போட்டியில் கட்டார் மற்றும் உஸ்பகிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன.