இன்று முதல் நாடளாவிய ரீதியில் கா பொ த உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சாத்திகளுக்கு காலை 08 30 மணியளவில் பரீட்சையானது ஆரம்பமாகியுள்ளது.
இன்று இணைந்த கணிதம் மற்றும் சமய பாடங்களுடன் ஆரம்பமான பரீட்சையானது எதிர்வரும் 31ம் திகதி தொடர்பாடலும் ஊடக கற்கை நெறியுடன் முடிவடையவுள்ளது.
குறிப்பாக இவ்வாண்டு பரீட்சையில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
இவர்களில் 281,445 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 65531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய இடையூறுகளை தவிர்ப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 எனும் இலக்கத்திற்கு அல்லது பரீட்சை திணைக்களத்தின் 1911 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.