அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றைய தினம் சிட்னி கிரிக்கட் மைதானதில் ஆரம்பமானது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதற்கமைய தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 77.1 ஓவர்கள் விளையாடி 313 ஓட்டங்களைப் பெற்று தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
பாகிஸ்தான் அணி சார்பாக மொஹம்மட் ரிஸ்வான் 88 ஓட்டங்களையும், ஆமெர் ஜமால் 82 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலி அணித் தலைவர் பெட் கம்மின்ஸ் 5 விக்கட்டுக்களை அதிக பட்சமாக வீழ்த்தினார்.
தொடர்ந்து அவுஸ்திரேலிய தனது முதலாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.
இன்றைய நாளின் ஆட்டநேர முடிவில் 1 ஓவருக்கு 6 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி பெற்றிருந்தது.
தற்போது டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளையும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.