நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே சமீபத்தில் ஏற்பட்ட ஆவணப்படம் தொடர்பான சர்ச்சையில் தனுஷின் தந்தை பேசியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Netflix ஆவணப்படம்
சமிபத்தில் நயன்தாரா தனுஷ் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார். இது விமர்சிக்க தக்க ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது.
நயன்தாராவின் ஆவணப்படத்திற்கான டிரெய்லரில் தோன்றும் நானும் ரவுடி தான் படத்தின் சுருக்கமான, மூன்று வினாடி வீடியோவிற்கு தனுஷ் 10 கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக நயன்தாரா தனுஷ் மீது குற்றம் தெரிவித்து இருந்தார்.
இந்த சர்ச்சை இருக்க இருக்க தீவிரமடைந்தது. இதுதொடர்பாக அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசிய கஸ்தூரி ராஜா, “எங்களுக்கு வேலை தான் முக்கியம். நிற்க நேரமில்லாமல் நாங்கள் ஓடி கொண்டிருக்கிறோம்.
எங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் குறித்து பதில் கூற எங்களுக்கு நேரமில்லை. என்னைப் போலவே எனது மகனுக்கும் வேலை தான் முக்கியம்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “நயன்தாரா தடையில்லா சான்றிதழ் பெற 2 ஆண்டுகள் தனுசுக்காகக் காத்திருந்ததாக கூறியது எல்லாம் பொய். இதற்கு மேலும் பேச எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்தார்.