Tamil News Channel

ஆவா குழு தொடர்பில் வெளியான அதிர்ச்சியான தகவல்

aavaa

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும்  ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வலான பிரதேச வீடொன்றில் தங்கியிருந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  இக் குழுவை   இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக  தெரிவித்துள்ளார்.

மேலும் ஆவா குழுவின் இலச்சினையில் உள்ள ‘001’ என்ற எண்ணுக்கான விளக்கம் தனக்கு எதுவும் தெரியாது எனவும்  இந்த இலச்சினையை உருவாக்கியவர்கள் சன்னா மற்றும் தேவா என்ற நபர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு  அவர்கள் இப்போது வெளிநாட்டில் வசிக்கிறார்கள் எனவும் இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராக அளவெட்டி கனி என்வும் கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts