இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளிற்கு இடையில் நடைபெற்று வரும் ஒரு நாள் சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் (6) சேர் விவியன் ரிச்சர்ட்சன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியுள்ளது.
நேற்றைய (6) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 39.4 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய அணித் தலைவர் சாய் ஹோப் அதிக பட்சமாக 68 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சாம் கரன் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 32.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
பந்துவீச்சில் குடகேஸ் மொடீ 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
துடுப்பாட்டத்தில் வில் ஜக்சன் அதிக பட்சமாக 73 ஓட்டங்களைப் பெற்றார்.
போட்டியின் ஆட்டநாயகனாக சாம் கரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
1.1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரில் சமநிலையில் உள்ளன.
தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (9) பர்படாஸில் நடைபெறவுள்ளது.