February 9, 2026
இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்
News Sports Top புதிய செய்திகள்

இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

Dec 5, 2023

கடந்த ஞாயிற்றுக்கிழமை  இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளிற்கு இடையே ஆரம்பித்த 3 ஒருநாள் மற்றும் 5 T20 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி இந்தியாவுடன் விளையாடிய பின்னர் மேற்கிந்திய தீவுகள் விளையாடும் சர்வதேச போட்டி இதுவாகும்.

ஞாயிற்றுக்கிழமை பர்புடாவில் நடைபெற்ற இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக ஹரி புரூக் அதிக பட்சமாக 71 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் குடகேஸ் மொடீ, ஒஸான் தோமஸ் மற்றும் ரொமேரியோ ஸெபேர்ட் ஆகியோர் தல 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

326 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.5 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுபாட்டத்தில் ஷாய் ஹோப் 109 ஓட்டங்களையும் அலிக் அதனாஷே 66 ஓட்டங்களையும் தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் ரெஹான் அஹ்மெட் மற்றும் கொஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய தீவுகளின் அணித் தலைவர் ஷாய் ஹோப் தெரிவு செய்யப்பட்டார்.

தொடரின் அடுத்த போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *