4 நாட்கள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்ட கட்டுநாயக்க விமான நிலைய புதிய சொகுசு பஸ் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு இடையில் போக்குவரத்து சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை நேற்று(19.08) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த புதிய சொகுசு பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டநிலையில், கடந்த 16 ஆம் திகதி விமான நிலையம் – கோட்டை பஸ் ஊழியர் சங்கம் புதிய சொகுசு பஸ் சேவைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது.
அத்தோடு இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், முறைப்பாடுகளை பரிசீலித்து விமான நிலைய புதிய சொகுசு பஸ் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.