December 17, 2025
இடைநிறுத்தப்பட்ட ரிஷாட் பதியுதீனின்  திட்டங்கள்..!
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட ரிஷாட் பதியுதீனின்  திட்டங்கள்..!

Aug 19, 2024

ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனால் ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த 200 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய மேலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய ஆறு மாவட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை ரிஷாட் பதியுதீன் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்காகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *