ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை.
கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பூஜ்ஜிய நிலைக்கு வந்துள்ளது.
கட்சி பல கூறுகளாகப் பிளவுபட்டுள்ளது.
கட்சியை மீள கட்டியெழுப்புவதென்பது இலகுவான விடயமாக அமையாது.
அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
கிராம மட்டத்திலான மக்கள் சுதந்திரக் கட்சியுடன் உள்ளனர்.
எனவே, புதிய நபர்களுடன் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றேன்.
கட்சிகள் மற்றும் அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே 2015 ஆம் ஆண்டில் பொது வேட்பாளர் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துளார்.