இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமாக பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 37 பேரும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே முன்னிலையில் சந்தேகநபர்கள் (04.07) ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையிலிருந்து இணையத்தளம் ஊடாக வியாபார ரீதியில் மோசடியில் ஈடுபட்ட 22 வயதான இலங்கை பிரஜையும் சீன, பங்களாதேஷ் மற்றும் நேபாள பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வௌிநாட்டு பணத்தை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அந்தப்பணத்தை இலங்கை ரூபாவில் நீதிமன்ற பொறுப்பில் வைக்குமாறும் அறிவித்துள்ளார்.
Post Views: 4