Wednesday, June 18, 2025

இணையத்தில் போலி வேலைவாய்ப்பு முகவர்கள் குழு!

Must Read

நாடளாவிய ரீதியில் 119 பேரை ஏமாற்றி 41 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் கூறப்படும் போலி வேலைவாய்ப்பு முகவர்கள் குழுவொன்று இணையத்தில் பரவியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் முகநூல் மூலம் அடையாளம் காணப்பட்ட போலி வேலை வாய்ப்பு முகவர்கள் ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, நியூசிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்து இவ்வாறு பணத்தை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கடந்த வருடம் இவ்வாறான 95 முறைப்பாடுகளும், இந்த வருடம் 45 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

இஸ்ரேல் மீது 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்: மோதல் மேலும் தீவிரமடையுமா?

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான மோதல் மோசமாகத் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் அலுவலகத்தின் தகவலின்படி, ஈரான் இதுவரை இஸ்ரேலின்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img