Tamil News Channel

இணையத்தில் விடுக்கப்படும் அறிவுறுத்தல்..!

24-660220a43ea8f

இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் வீட்டிலிருந்து மின்னஞ்சல் ஊடாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

எனவே dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது, 109 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்ட பிரச்சினைகளை அறிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் 24 மணி நேரமும் செயல்படும் எனவும், பாதிக்கப்படும் நபர்கள் எந்நேரமும் தொடர்புகொண்டு உதவிகோர முடியுmena பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts