இவ்வருடத்தின் கடந்த 5 மாத காலப்பகுதிக்குள் 1,093 முறைப்பாடுகள் இணையவழி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல இது தொடர்பில் தெரிவிக்கையில்,
சமூக ஊடகங்கள் தொடர்பில் இதுவரை 7,916 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவற்றில், குறிப்பாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் இரண்டு மாத காலப்பகுதிக்குள் 27 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மேலும், இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2