இத்தாலி – இலங்கை சாரதி உரிம பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!
இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையில் சாரதி உரிமங்களை பரஸ்பரம் அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் 2021 இல் முடிவடைந்தது. இதனை மறுபரிசீலனை செய்து புதுப்பிப்பதற்கும், தேவையான தொழில்நுட்ப திருத்தங்களைச் சேர்ப்பதற்கும், ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
புதிய ஒப்பந்தத்தின் கீழ்:
-
இத்தாலியில் 6 ஆண்டுகளுக்கும் குறைவாக வசிக்கும் இலங்கையர்கள்,
-
இத்தாலிய வசிப்பிடத்தைப் பெறுவதற்கு முன் செல்லுபடியாகும் இலங்கை சாரதி உரிமத்தை பெற்றவர்கள்,
இந்த இருவரும் தங்களின் இலங்கை ஓட்டுநர் உரிமங்களை மாற்றி இத்தாலிய சாரதி உரிமம் பெறும் வசதி பெறுவார்கள்.
அதேபோல், இலங்கையில் வசிக்கும் இத்தாலிய குடிமக்கள், தங்களின் செல்லுபடியாகும் இத்தாலி சாரதி உரிமத்தை இலங்கை ஓட்டுநர் உரிமமாக மாற்றிக் கொள்ளும் நடைமுறைவும் ஏற்படுத்தப்படும்.
இதற்கான தேவையான செயன்முறை அமைப்பை உருவாக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
![]()