இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 07 கட்டங்களாக இடம்பெற்று வரும் நிலையில் இன்று இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகின.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் வன்முறை மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் 08 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (01) காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதன்படி, உத்தர பிரதேசம்,மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் , சண்டிகரில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றது.
ஜூன் மாதம் 04 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.