இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் மூடல்..!

0
19

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்திய வான்வெளிகளில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்திய அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நிலை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் திகதி காலை 5.29 மணி வரை மூடப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரகம் அறிவித்துள்ளது.

இதன்படி ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, பூஜ், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மேர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், காண்ட்லா, காங்க்ரா (ககல்), கேஷோத், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லெஹ், லூதியானா, லே, லூதியானா, பத்ரா, லூதியானா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோயிஸ் மற்றும் உத்தரலை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களை அடையுமாறும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

இதேவேளை , டெல்லி மற்றும் மும்பை விமானங்கள் இயங்கும் வழித்தடங்கள் மே 15 அன்று காலை 5:29 மணி வரை மூடப்படுகிறது. இந்தப் பகுதிகளில் எல்லை தாண்டிய பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here