November 18, 2025
இந்தியாவில் பால் ஏற்றி சென்ற பௌசர் பஸ்  மோதி விபத்து !
World News

இந்தியாவில் பால் ஏற்றி சென்ற பௌசர் பஸ்  மோதி விபத்து !

Jul 10, 2024

இந்தியாவில்   உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ராவில் அதிவேக வீதியில் டபுள் டக்கர் பஸ் ஒன்று , பால் ஏற்றி சென்ற பௌசர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில்  சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை (10) அதிகாலை 5.15 மணியளவில் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான டபுள் டெக்கர் பஸ்ஸில் பயணித்த 19 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *