வட இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் இன்று அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி பஞ்சாப், அரியானா, டெல்லி, ஜம்மு, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இன்று தீவிரமான வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.