
இந்தியாவில் 04 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்!
இந்தியாவில் 04 மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆரம்பித்துள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்று மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பாரதப் பிரதமரானதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய 04 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ளது.
ஒக்டோபர் மாதம் முதல் தேர்தல் நடைபெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் பாரத ஜனதா கூட்டணிக்கு, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சவாலாக இருந்தது.
இந்நிலையில் இடம்பெறவுள்ள 04 மாநில சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணிக்கு இந்தியா கூட்டணி கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரியானா சட்டசபையின் பதவி காலம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதியும் மகாராஷ்டிராவில் நவம்பர் மாதம் 26 ஆம் திகதியும் ஜார்க்கண்டில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதியும் சட்ட சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் முதலாம் திகதி வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படவுள்ளதுடன்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்த பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகும். வாக்காளர் இறுதி பட்டியல் ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு முதல் முறையாக சட்டசபை தேர்தல் இடம்பெறுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது சட்டப்பிரிவு ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது.
இந்த சட்டப்பிரிவால் இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது.
இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறும் பிரிவு 1 தவிர, ஜம்மு காஷ்மீருக்கு வேறு எந்தச் சட்டமும் பொருந்தாது.
ஜம்மு காஷ்மீருக்கு என தனி அரசியலமைப்பு உள்ளது. அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் மாநிலத்திற்குப் பொருந்தக் கூடிய வகையில் மாற்றியமைக்கும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது.
ஆனால், இதற்கு மாநில அரசின் ஒப்புதல் கட்டாயம். வெளிவிவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு என மூன்று துறைகள் தொடர்பாக மாத்திரமே இந்திய நாடாளுமன்றம் ஜம்மு காஷ்மீரின் சட்டங்களில் திருத்தம் செய்யலாம் என்றும் சட்டப்பிரிவு 370ல் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 04 வருடங்களின் பின்னர் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அரசியலமைப்பின் 1 மற்றும் 370 வது பிரிவுகளில் இருந்து இது தெளிவாகிறது’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி,ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.