கர்நாடகா உற்பட 4 மாநிலங்களின் 19 இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் I.S.I.S பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான I.S.I.S இந்தியாவில் பயங்கரவாத முயற்சிகளை மேற்கொள்வதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த அமைப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மகாராஷ்ராவில் 40 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு அந்த அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் இவ் அமைப்புடன் தொடர்புடைய முக்கியத் தலைவர் என்பதும், அமைப்பில் புதிதாக சேர்பவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து வைக்கக்கூடியவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் 4 மாநிலங்களில் N I A அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் பெல்லாரி மற்றும் பெங்களூரில் 11 இடங்களிலும் ஜார்க்கண்ட்டில் ஜாம்ஷெட்பூர் மற்றும் பொகாரோ ஆகிய 2 இடங்களிலும் மகாராஷ்டிராவில் அமராவதி, மும்பை மற்றும் புனே ஆகிய 3 இடங்களிலும் டெல்லியில் ஓர் இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.