T20 உலகக் கோப்பையை வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி இதனை கொண்டாடும் விதமாக மும்பையில் திறந்த பேரூந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மும்பை வான்கடே அரங்கத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்ததோடு, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்காக ரூபாய் 125 கோடி ஊக்கத் தொகையும் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியுடன் உரையாற்றுகையில் “சிறப்பான ஒரு அணியை வழிநடத்தியதில் நான் அதிர்ஷ்டசாலி எனவும் அணியிலுள்ள அனைத்து வீரர்களும் அருமையாக விளையாடினார்கள். மும்பை ரசிகர்களின் வரவேற்பு மெய்சிலிர்க்க வைத்ததுடன் இந்த உலகக் கோப்பை ஒட்டுமொத்த தேசத்துக்கும் உரியது எனவும் ஐ.சி.சி கோப்பைக்காக 11 ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்” எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.