இந்திய இழுவை படகின் அத்துமீறலுக்கான எதிர்ப்பு போராட்டம் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தினரால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மருதடி சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இந்திய துணை தூதரகத்திற்கு அருகாமை வரை தொடர்ந்து செல்லப்பட்டது .
போராட்டக்காரர்கள் பொலிசாரினால் இடைநிறுத்தப்பட்டு ஐந்து பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்திய துணைத் தூதரக அதிகாரியிடம் சம்மேளத்தினரால் மகஜர் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடல்தொழில் அமைப்புகளின் சம்மேளனம் தலைவர் செல்லத்துரை நற்குணம் யாழ் மாவட்ட கிராமிய கடல்தொழில் சமாசங்களின் சம்மேளன தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
Post Views: 2