கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 200,026 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 154,537 வாகனங்கள் ஏற்கனவே சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட வாகனங்களில் 98,923 மோட்டார் சைக்கிள்கள், 40,323 மோட்டார் வாகனங்கள், 9,025 முச்சக்கர வண்டிகள், 5,368 வணிக வாகனங்கள் மற்றும் 898 வேன்கள் மற்றும் பேருந்துகள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுங்கத் திணைக்களம் ரூ. 429 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் வாகன இறக்குமதிக்காக 30,594 கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு 1,491 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here