பிரம்மசூத்திரம் அடங்கிய சிவன் கோவிலை சென்றால் ஆயிரம் சிவனை தரிசித்த பலனும், புண்ணியமும் கிடைக்கும் என கோயில் வரலாறு கூறுகிறது.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பல அதிசயங்களை கொண்ட சிவன் கோவில் ஒன்று ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ளது.
ஸ்ரீமுகலிங்கம் கிராமத்தில் உள்ள சோமேஸ்வரசுவாமி கோவிலுக்கு சென்று சிவனை தரிசித்தால் பல கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பொதுவாக கோவில்கள் அனைத்தும் கிழக்கு நோக்கி வரும் ஆனால் இந்த சிவன் கோவில் மேற்கு நோக்கி இருக்கும்.
இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது மாலை நேரத்தில் சூரிய ஒளியும், இரவு நேரத்தில் சந்திரனின் ஒல்லியும் விழுவது ஆச்சரியமாக மக்கள் பார்த்து செல்கின்றனர்.
இந்த பிரம்மசூத்திர லிங்கத்தை ஒருமுறை தரிசனம் செய்வது ஆயிரம் சிவலிங்கங்களை தரிசனம் செய்ததற்கான பலனைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலுக்கு வருகை தந்து லிங்கத்தை தரிசித்து, சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நம் உடலில் உள்ள நாள்பட்ட நோய்கள் தீரும் என கோயில் வரலாறு தெரிவிக்கின்றன.