தற்காலத்தில் இருப்பவர்கள் அதிகமான நோய்களுடன் தான் அன்றாட வாழ்க்கையை வாழ்கிறார்கள். இப்படியான வாழ்க்கையை வாழ வேண்டாம் எனநினைப்பவர்களுக்காக சாணக்கியர் சில குறிப்புக்களை கூறியுள்ளார்.
அப்படியாயின் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் என்னென்ன பழக்கங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. உணவு சாப்பிடும் போது அடிக்கடி தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு ஏற்றதாக இருக்காது. மாறாக சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பின்னர் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடவுடன் தண்ணீர் குடிப்பது விஷத்திற்கு நிகரானது என சாணக்கியர் கூறுகிறார்.
2. உலர் தானியங்கள், தூள் தானியங்கள், பால், இறைச்சி, நெய் என ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் உங்களின் தோற்றத்தை முடிவு செய்வதும் உணவு என்பதனை மறந்து விடாதீர்கள்.
3. உடலில் உள்ள புலன்களில் கண்கள் மிக முக்கியமானவை. அதிலும் மூளை மிகவும் முக்கியமானவை என சாணக்கியர் கூறுகிறார். இவை இரண்டையும் கவனமாக பார்த்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கை செழிக்கும்.
4. உடலுக்கும் வாரத்திற்கு ஒருமுறை முழு உடல் மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்வதால் சருமத் துளைகள் திறந்து உள்ளே இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற செய்யும். இதனால் ஆரோக்கியமாக வாழலாம்.
5. பால் அருந்துவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும். பால், தானியங்கள் இவை இரண்டும் எலும்புகளை வலிமையாக்கி கட்டுடலை பாதுகாக்கும்.