12 ராசிகளுக்குமே தனித்தனி குணநலன்கள் உள்ளன. ஆனால், சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட மிகவும் பிடிவாதக்காரர்களாக இருப்பதோடு ஒருபோதும் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்.
மேஷம்
மேஷ ராசியினரிடம் பிடிவாதமும் தற்பெருமையும் அதிகம். எத்தனை ஆதாரங்களை அவர்கள் முன் சமர்ப்பித்தாலும் அவர்கள் தன் மீது தவறு என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்பது அவர்களை பலவீனமானவர்களாக உணர வைப்பதனால் அவர்கள் யாரிடமும் கீழிறங்கிப் போக மாட்டார்கள்.
ரிஷபம்
எதற்கெடுத்தாலும் வாதாடும் ரிஷப ராசிக்காரர்களுக்கு மன்னிப்புக் கேட்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவர்கள் தங்களை சரியென நிரூபிப்பதற்காக மிகவும் போராடுவார்கள். சில வேளைகளில் இது உறவுகளுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
சிம்மம்
சிம்ம ராசியினர் தவறுகளை அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது மற்றவர்களுடனான தொடர்பில் விரிசலை ஏற்படுத்துகிறது.
விருச்சிகம்
மன்னிப்பு கேட்பதை ஆழ் மனதிலிருந்து வெறுப்பார்கள். மற்றவர்கள் இவர்களிடம் தவறை சுட்டிக்காட்டும்போது அதனை அவமானமாக நினைக்கிறார்கள்.
மகரம்
தவறுகளை திருத்திக்கொள்வதை விட தங்கள் நற்பெயரை பாதுகாத்துக்கொள்ள விரும்புவார்கள். அனைத்தையும் விடவும் தங்கள் தற்பெருமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.