Tamil News Channel

இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்… உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க..!

raasi1

வாழ்வில் மிகவும் முக்கியமான பாகங்களில் திருமணம் முக்கிய இடம் வகிக்கின்றது. வாழ்க்கை துணை சிறப்பாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே சொர்க்கம் போல் இருக்கும் அதுவே பொருந்தாத திருமணம் என்றால் வாழ்நாள் ழுமுவதும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.

இதன் காரணமாகத்தான் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அறுவடை சரியாக அமையாவிட்டால் ஒரு வருடம் தான் வீணாகும் ஆனால் திருமணம் பிழைத்துப்போனால் ஒரு ஜென்மம் வீணாகிவிடும் என்ற கருத்தும் காணப்படுகின்றது.

அந்தளவுக்கு திருமணம் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கின்றது. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த ராசியினரின் ஜோடி பொருத்தம் அமோகமாக இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம் – கடகம்

இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Makes The Best Couples

இந்த இரண்டு ராசியினர் திருமண பந்தத்தில் இணையும் போது, அவர்கள் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு செயற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. கடக ராசியினர் இயல்பாகவே உணர்ச்சிக்கு மதிப்பளிப்பவர்களாக இருப்பார்கள். அது போல் மீன ராசியினர்  விரைவில் சமாதானம் அடையும் குணமுடையவர்களாக இருப்பார்கள். எனவே இந்த ராசிகள் திருமண பந்தத்தில் இணையும் போது ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும் மரியாதை கொடுப்பதும் சிறப்பாக இருக்கும்.

துலாம் – மேஷம்

இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Makes The Best Couples

துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிகமாக மகிழ்சியை விரும்புபவர்களாக இருப்பார்கள். அதே போன்று மேஷ ராசிக்காரர்கள் மிகவும் வெளிப்படையாகனவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். எனவே இந்த இரண்டு ராசியினர் வாழ்வில் இணைந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கும். இந்த இரண்டு ராசியினருக்குமே விட்டுக்கொடுக்கும் பண்பும் தவறு செய்யும் பட்சத்தில் மன்னிப்பு கேட்கும் குணமும் இருப்பதால் இருவரின் ஜோடி பொருத்தம் அமோகமாக இருக்கும்.

சிம்மம் – கன்னி

இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Makes The Best Couples

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே மற்றவர்கள் மீது அதிக கருணை கொண்டவர்களாக இருப்பார்கள். அது போல் கன்னி ராசியினர் அமைதியை விரும்புவதால், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தேர்ச்சிப்பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே இந்த இரண்டு ராசியினரும் திருமணம் செய்துக்கொள்ளும் பட்சத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியும் அமையுதியும் நிறைந்ததாக இருக்கும்.

கும்பம் – மிதுனம்

இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Makes The Best Couples

மிதுனம் மற்றும் கும்ப ராசியினர் எப்போதும் எதிர்காலத்தை பற்றி சிந்தனை கொண்டவர்களாக இருப்பதனால் இந்த ராசியினர் ஜோடி சேர்ந்தால் எதிர்கால வாழ்க்கை மிகவும் முன்னேற்றகரமானதாக அமையும். இந்த ராசியினர் கடந்த காலம் பற்றி சிந்தித்து சண்டை பிடிக்கும் குணம் அற்றவர்களாக இருப்பதால் இவர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள் விரைவில் தீர்ந்துவிடுகின்றது. இதனால் இவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts