பற்றாக்குறையாக உள்ள இன்சுலின் வகையை அடுத்த நான்கு நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
விநியோகப் பதிவு செயற்பாட்டில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்சுலினிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் முதல் தொகுதியாக இன்சுலின் கலவையை நாட்டிற்கு விமானத்தில் கொண்டு செல்வதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதுவரை மட்டுப்படுத்தப்பட்ட இருப்புக்களை உரியமுறையில் பயன்படுத்துமாறு வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மூன்று வகையான இன்சுலின் வகைப் பயன்படுத்தப்படுவதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.