Tamil News Channel

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பமான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்கா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் KL ராகுல் (KL Rahul) அதிக பட்சமாக 101 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் ககிசோ ரபாடா (Kagiso Rabada) 5 விக்கட்டுக்களையும், நன்றே பர்கர் (Nandre Burger) 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 408 ஓட்டங்களைப் பெற்றது.

டீன் எல்கர் (Dean Elgar) அதிரடியாக துடுப்பெடுத்தாடி 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

மேலும், மார்கோ ஜன்சென் (Marco Jansen) ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும் தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

இதேவேளை, பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா (Jasprit Bumrah) 4 விக்கட்டுக்களையும், மொஹம்மெட் சிராஜ் (Mohammed Siraj) 2 விக்கட்டுக்களையும் அதிக பட்சமாக பெற்றனர்.

தென்னாபிரிக்கா அணி 163 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ள போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 131 ஓட்டக்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் விராட் கோலி (Virat Kohli) 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் நன்றே பர்கர் (Nandre Burger) 4 விக்கட்டுக்களையும், மார்கோ ஜன்சென் (Marco Jansen) 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக டீன் எல்கர் (Dean Elgar) தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா முன்னிலையில் உள்ளது.

இதேவேளை தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி புதன் கிழமை நியூலேண்ட்ஸ் கிரிக்கட் மைதானத்தில் (Newlands Cricket Ground) நடைபெறவுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts