January 20, 2026
இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை
News News Line Top புதிய செய்திகள்

இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

Jan 12, 2024

இன்று முதல் வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது .

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

தீவின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *