Thursday, March 12, 2026

இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை..!

Must Read

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . மற்ற இடங்களில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடமத்திய, வடமேற்கு, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-35) கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் .

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights