December 13, 2025
இன்றும் பல பகுதிகளில் பிற்பகல் மழை
News News Line Top புதிய செய்திகள்

இன்றும் பல பகுதிகளில் பிற்பகல் மழை

Nov 23, 2023

இன்றையதினம் (23) மாலை வேளையில் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென், மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *