பிரித்தானிய இளவரசி அன்னே பிரின்ஸஸ் ரோயல் (Anne, Princess Royal) இன்று (10) 5 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே, இவர் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இளவரசி அன்னே நாளை (11) வட மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் பிரித்தானியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ். பொது நூலகத்தினை பார்வையிடுவதுடன் பிரித்தானிய நூலக கோணரினையும் திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியாவின் இளவரசியின் மெய் கண்காணிப்பாளர்கள் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதரக்குழுவினர்கள் நேற்று (09) மதியம் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.